அட்டன் பஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொதியில் இருந்தது என்ன? ( Update) வீடியோ இணைப்பு

0
3577

அட்டனில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொதியை மோப்பநாயின் உதவி கொண்டு அட்டன் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்தப்பெட்டியில் உடுதுணிகள் அதிகளவு இருந்ததாகவும் யாராவாது நபரொருவர் அதனை விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் வைத்து பெட்டியை பிரித்து பார்த்ததில் உடுதுணிகள் இருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த மர்மப் பொதியினால் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு பஸ்தரிப்பிட நிலைய வளாகம் அல்லோலகல்லோலபட்டதுடன் பெறும் பதற்ற நிலையும் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் எம்.கிருஸ்ணா

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here