அட்டன் வர்த்தகரை காணவில்லை – கண்டால் 0718- 591117 எனும் இலக்கத்திற்கு அறிவிக்கவும்

0
1022

அட்டன் டன்பார் வீதியில் கடையொன்றை நடத்தி வந்த வர்த்தகரொருவரை காணவில்லையென அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அட்டன், எபோட்ஸிலி தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான ஆர்.ரஞ்சித்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளதாக குறித்த நபரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்டனில் டன்பார் வீதியில் கடையொன்றை நடத்தி வந்த குறித்த நபர், 29ஆம் திகதி காலை வீட்டிலிருந்து வருகைதந்து கடைவியாபாரம் நடத்தியுள்ளார் என்றும் அன்றைய தினம் மாலை வீடு திரும்பவில்லையெனவும் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன வர்த்தகர் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த தொழிலதிபர் பற்றி தகவல் தெரிந்தால் 0718- 591117 என்ற எண்ணிற்கு ஹட்டன் தலைமையகம் தலைமை பொலிஸ் பரிசோதகரின் தொலைபேசியில் அறிவிக்குமாறு அட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here