அனுரவை வென்ற நாமல்

0
192

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுரகுமார திசநாயக்கவை யூடியூப் அலைவரிசை ஊடாக பார்வையிட்டோரை விட நாமல் ராஜபக்சவை பார்வையிட்டோர் அதிகம் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர் வேட்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ‘சிரச’ தொலைக்காட்சியின் ‘போர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

‘சிரச’ யூடியூப் சேனலில் அதன் நேரடி ஒளிபரப்பைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 106,000ஐத் தாண்டியது.

அதற்கு முன்தினம் இரவு ‘சிரச’ அலைவரிசையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அரச தலைவர் வேட்பாளருமான அநுரகுமார திசநாயக்க பங்கேற்ற போர் நிகழ்ச்சியையும் ‘சிரச’ யூடியூப் அலைவரிசையில் 70,000 பேர் நேரலையில் பார்வையிட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here