‘அன்புள்ள’ திரைப்படத்தின் அறிமுக விழாவும் ‘பறவாதி’முழு நீள திரைப்படங்களின் முன்னோட்ட காட்சிகளும் இன்று

0
374

கருடன் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் ‘அன்புள்ள’ திரைப்படத்தின் அறிமுக விழாவும் பழங்குடி மக்களின் வாழ்வியல் சார்ந்த ‘பறவாதி’ முழு நீள திரைப்படங்களின் முன்னோட்ட காட்சிகளின் வெளியீட்டு விழாவும் இன்று 1ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

‘அன்புள்ள’ திரைப்படம் கதிரின் எழுத்துஇ இயக்கத்திலும் ‘பறவாதி’ அஜந்தனின் எழுத்துஇ இயக்கத்திலும் அமைந்துள்ளது.

இவ்விரு படைப்புகள் பற்றி ‘ கருடன் தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் எல்றோய் அமலதாஸ் கூறும் போது… ‘எதிர்காலத்தில் வர்த்தக சினிமாவாக முன்கொண்டு செல்வதும் படைப்பார்கள் தங்களது பணிகளை முன்னெடுக்கும் போது எவ்வித தடைகளுமின்றி புதிய பாதையில் சர்வதேச படைப்பாளர்களுடன் ஈழத்து படைப்புகளை இணைப்பது நோக்கமென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here