அமைச்சுப் பதவியை பெறுவது எனது நோக்கம் அல்ல – அட்டனில் திகா எம்.பி- வீடியோ இணைப்பு

0
734

சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் அமைச்சுப் பதவி எடுக்க வேண்டும் என்ற நோக்கம் என்னிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அட்டனில் இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக நாடும் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்தது என்பது யாவரும் அறிந்ததே. வரிசையில் நின்றே  அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைமை தற்போது கொஞ்சம் மாறியுள்ளது.

நீங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சுப்பதவி எடுப்பீர்களா என்று எல்லோரும் கேட்கின்றனர். எனக்கு அப்படி ஒரு நோக்கம் இல்லை. இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி காண வேண்டும்.

எல்லோரும் அமைச்சுப்பதவி கேட்டுக்கொண்டிருக்கும் போது நான் அதுபற்றி எதும் பேசாமல் இருக்கின்றேன். மக்களுக்கான சேவைகள் சரியாக இடம்பெற வேண்டும் என்பதே எனக்கு முக்கியம். அமைச்சுப் பதவி எடுத்து குறுகிய காலப்பகுதிக்குள் முழுமையான சேவையை மக்களுக்கு வழங்க முடியாவிடின் அவர்களை ஏமாற்றுவது போல ஆகிவிடும் என்றும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here