அரசி 2ஆம் எலிஸபெத்தின் உடல் கவலைக்கிடம்

0
306

பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத்தின் உடல்நிலை குறித்து அவரின் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசி 2 ஆம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

96 வயதான 2 ஆம் எலிஸபெத் 1952 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய மற்றும் கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட பல நாடுகளின் அரசியாக விளங்குகிறார்.

பிரிட்டனை மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்தவாக அவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்திலுள்ள தனக்குச் சொந்தமான பல்மோரல் மாளிகையில் தற்போது 2 ஆம் எலிஸபெத் அரசி தங்கியுள்ளார். அரச குடும்பத்தினர் பலர் தற்போது பல்மோரல் மாளிகைக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here