அரசுக்கு எதிராக நுவரெலியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
329

நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்களுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன

நாட்டில் ரணில் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் .

அவர் விலகிய பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்போம் எனவும் தமது உரிமைகளுக்காக போராடி வரும் மக்களை கைது செய்வது முற்றிலும் பிழை , நாட்டில் தற்போது சீரழிந்த பொருளாதாரத்தை சீர் செய்ய வேண்டும் , அரசாங்கம் சுயநலத்தை கைவிட்டு பொது மக்களின் நலனுக்காக செயற்ப்பட வேண்டும் , போராட்டம் நடாத்தும் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here