ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தமிழ்ப் பொது வேட்பாளராகக் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்குத் தேர்தல் சின்னம் ‘சங்கு’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் சமூக மட்ட சிவில் அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கியுள்ளன.
அந்தவகையில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் வேட்புமனுப் பத்திரம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் சின்னமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
…………..