அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முன்னணி வலைப்பந்தாட்ட தொடர்களில் ஒன்றான விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக்கின் வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ் அணியில் இலங்கையின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இணைந்துள்ளார்.
விக்டோரியன் வலைப்பந்தாட்ட லீக்கின் முன்னணி அணியான வெஸ்ட் சிட்டி பல்கோன்ஸ்இ 2009ஆம் ஆண்டு இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து 14 தடவைகள் சம்பியனாக முடிசூடியுள்ளது. அதுமாத்திரமன்றி நடப்பு சம்பியனாகவும் இந்த அணி களமிறங்குகிறது.
இந்த தொடரில் கடந்த ஆண்டு விளையாடியிருந்த தர்ஜினி மீண்டும் களமிறங்குகிறார். இலங்கை வலைப்பந்தாட்டத்தில் மாத்திரம் இல்லாமல் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக இருந்து வரும் இவர்இ உலகின் சிறந்த ஷூட்டர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.