கிரிக்கெட் உலகின் மிக செல்வந்த கிரிக்கெட் தொடரான 16ஆவது இந்திய பிரீமியர் லீக் தொடர் இன்று (31) இந்தியாவில் ஆரம்பமானது.

கடந்த ஆண்டு முதல் முறை அறிமுகமான தொடரிலேயே சம்பியன் கிண்ணத்தை வென்ற குஜராத் டைடன்ஸ் முதல் போட்டியில் இன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அஹமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது

எட்டு வாரங்கள் 12 மைதானங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன. 2022 குஜராத் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட் அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்ட நிலையில் இம்முறை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

நொக் அவுட் போட்டிக்கு முன்னர் 70 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதோடு தொடரின் இறுதிப் போட்டி வரும் மே 28 ஆம் திகதி அஹமதாபாத், நரேந்திர மோடி அரங்கில் நடைபெறவுள்ளது.