ஆயிஷா கொலைக் குற்றவாளி தொடர்பில் திடுக்கிடும் தகவல்

0
372

அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதற்கு முன்னரும் வேறொரு பெண்ணுடன் துஸ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக பிரவேசித்த சந்தேக நபர், அவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்…
‘நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர் என் வீட்டிற்குள் வந்து எனது வாயை அடைத்தார் அந்த சந்தர்ப்பத்தில் நான் கண்விழித்து விட்டேன் பின்னர் அவர் என்னை கயிற்றால் கட்ட முயன்றார். நான் கத்தினேன். அவர் உடனடியாக வீட்டிலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். ‘

அதன் பின்னர் நான் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அப்போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாத்திமாவுக்கு இப்படியொரு கதி வந்திருக்காது என்றும் அந்த பெண் மேலும் கூறயுள்ளதாகத் அறியக்கூடியதாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here