இடையூறுகளை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை

0
295

டயகம நகரில் இருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி செல்லும் தனியார் பேருந்து நேர அட்டவணையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவும், மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அதிகாரிகளின் அசமந்த போக்கினாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண பிரதான செயலாளர் இ.தொ.காவின் குழுவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கொட்டகலை ஊடக வளாகத்தில் இடம்பெற்றது.

மேலும் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை வெளிப்படையாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரிகள் இதற்குப் பிறகும் இப்படியான இடையூறுகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் தனியார் பேருந்து உரிமையாளருக்கு பாரபட்சமான முறையில் நடந்து கொள்ள கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல் உபதலைவர் சச்சிதானந்தன் அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் ராமன் கோபால் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்து உயர் அதிகாரிகளும் தலைவர் மற்றும் பஸ் உரிமையாளர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .

CWC Media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here