பா.ஜ.,வின் நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் ஆகியோர் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறியுள்ளனர். இதற்கு பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் , நபிகளை அவமதித்தால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அல்கொய்தா   இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து இருவரையும் பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து கட்சி மேலிடம் நீக்கியது.

இது தொடர்பாக அல்கொய்தா வெளியிட்ட கடிதத்தில், ‛நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டில்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்கள் முடிவுக்காக டில்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்’ என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தாவின் இந்த மிரட்டல் கடிதம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.