இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில்…

0
222

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பிற்பகல் 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்காக விடப்படவுள்ளது.

2022 ஜூலை 17ஆம் திகதிய 2288/30ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அப்போதைய பதில் ஜனாதிபதியினால் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டதுடன், சட்ட விதிகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் இது இரத்தாகிவிடும்.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்குப் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டிருப்பதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here