‘இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறாது’ அறிவிப்பின் பின் அட்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்

0
480

அட்டன் நகர் ஸ்ரீ மாணிக்கப்பபிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள சிபொட் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பிரதேசவாசிகள் நின்றிருந்த நிலையில், ‘இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறாது’ என அட்டன் பொலிஸார் ஒலி பெருக்கியின் மூலம் அறிவித்ததையடுத்தே பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அட்டன் – கொழும்பு, அட்டன்- கண்டி, அட்டன் – நுவரெலியா பகுதிக்கான போக்குவரத்து ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த அட்டன் பொலிஸார், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு மண்ணெண்ணெய் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததையடுத்து ஆர்பாட்டகாரர்கள் குறித்த இடத்தில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.
தகவல் – முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here