இன்றைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறானதாக இருக்கும்?

0
518
ஹக்கீம், ரிஷார்ட், தௌபீக் ஆகியோரைத் தவிர அதாவுல்லாஹ்வுடன் சேர்த்து 11 முஸ்லிம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு..!
ஜனாதிபதி தேர்தல் தெரிவில் ரணிலுக்கும் டலசுக்குமிடையில் கடும் போட்டி என்று செய்திகள் தீயாக பரவினாலும் என்னைப் பொறுத்தவரை அப்படி இருப்பதாக தெரியவில்லை.
* டலசுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளவர்களில் எத்தனை பேர் சொன்னபடி செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.
* கட்சித்தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்தாலும் எத்தனை பேர் அவர்களின் பேச்சை கேட்பார்கள் என்பது நிச்சயமில்லை.
(சுதந்திரக்கட்சி – தமிழ்க் கூட்டமைப்புக்குள் இதுதான் நிலைமை)
* கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளின் அழுத்தம் கட்சித் தலைவர்கள் பலருக்கு சென்றிருப்பதால் – பலர் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும்படி தங்களின் எம்.பிக்களை கேட்டுள்ளதாக தெரிகிறது.
* இந்த செய்தி எழுதப்படும் இந்த நிமிடத்தில் டலஸ் பக்கம் ஆதரவு அதிகமான நிலை இருப்பதுபோல இருந்தாலும் ரணில் சில வியூகங்களை வகுத்து எம்.பிக்களை வளைத்திருக்கிறார்.
இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்புக்குப் பின்னர் அந்த வியூகங்களை பகிர்கிறேன்.
* இவற்றுக்கெல்லாம் அப்பால் டலஸ் அழகப்பெரும டீமின் முக்கிய தூண்களை கழற்ற, இன்றிரவு ரணில் முக்கிய சந்திப்புகளில்..
* விமல் வீரவன்ச இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டினால் பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு எம்.பிக்கள் அதிருப்தியில்.
* ஹக்கீம், ரிஷார்ட், தௌபீக் எம்பி மாரை தவிர அதாவுல்லாஹ்வுடன் சேர்த்து 11 முஸ்லீம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு – முஸ்லிம் விரோதப்போக்கை கடைப்பிடித்த சன்ன ஜெயசுமன, ரத்தன தேரர் உட்பட்ட எம்.பிக்கள் டலஸின் வருகையின் பின்னால் இருப்பதாக அவர்கள் விமர்சனம்.
* தமிழ்க் கூட்டமைப்புடன் எழுத்துமூல உடன்பாட்டுக்கு டலஸ் – சஜித் அணி வந்திருக்குமாயின் தங்களுடன் அப்படியொரு ஏற்பாடு நடக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் இன்றிரவு தீர்மானம். இல்லையேல் டலசுக்கு வழங்கும் ஆதரவு மீள் பரிசீலனை.
* கூட்டிக்கழித்துப் பார்த்தால் சிறியதொரு வித்தியாசத்தில் ரணில் வெல்லும் வாய்ப்பே இப்போது இருக்கிறது. இந்த நிமிடத்தின் நிலைமை இதுதான்.
-Situation Report by R.Sivaraja- -Siva Ramasamy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here