மேஷம்: அசுவினி : நண்பர்கள் வழியே பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.
பரணி : மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். பிறரிடம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
கார்த்திகை 1 : எதிர்பார்த்த ஒரு செயல் நிறைவேறும். மனதிற்கினிய சம்பவம் நடக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : ஆடம்பர செலவால் தடுமாற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் நெருக்கடி ஏற்படும்.
ரோகிணி : அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பிய ஒன்றை இன்று அடைவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : பிறருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நல்லசெய்தி தேடி வரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை நீங்கள் செய்து முடிப்பீர்கள்.
திருவாதிரை : நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : குலதெய்வத்தின் அருளால் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3 : உங்களுடைய செயல் இன்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.
ஆயில்யம் : வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

சிம்மம்: மகம் : வழக்கமான செயல் இழுபறியாகும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.
பூரம் : உடல் நிலைக் குறித்த பயம் நீங்கும். வேலையில் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
உத்திரம் 1 : உங்களுடைய முயற்சி இழுபறியாகும். நன்கு அறிமுகமானவர்கள் இன்று விமர்சிப்பார்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்களுடைய முயற்சி தடைபடும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.
அஸ்தம் : எதிர்பாராத பிரச்னையை நீங்கள் சந்திப்பீர்கள். பணம், நகை விஷயங்களில் கவனம் தேவை.
சித்திரை 1, 2 : வரவேண்டிய பணம் தாமதமாகும். தேவையில்லாத செயலில் ஈடுபடாதீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4 : செயல்களில் இருந்து வந்த தடை விலகும். பெரியவர்களின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.
சுவாதி : உங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அரசு வழியில் இழுபறி ஏற்படும்.
விசாகம் 1, 2, 3 : எதிர்பாலினத்தவரால் எண்ணம் நிறைவேறும். மற்றவர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்: விசாகம் 4 : மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம் : குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்துவதற்குரிய முன்னேற்ப்பாடு செய்வீர்கள்.
கேட்டை : எதிரியின் தொல்லைகளுக்கு முடிவு காண்பீர்கள். செயல்களில் வேகம் அதிகரிக்கும்.

தனுசு: மூலம் : இன்று உங்களுடைய கவனம் சிதறினால் சில இழப்புகளை சந்திப்பீர்கள்.
பூராடம் : பணி புரியும் இடத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அரசு வேலை இழுபறியாகும்.
உத்திராடம் 1 : எதிர்பார்த்தவற்றில் திருப்தியான நிலை ஏற்படும். தர்ம சிந்தனை உங்களைப் பாதுகாக்கும்

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : வழக்குகளில் இன்று எதிர்பார்த்த நன்மையைக் காண முடியாமல் போகும்.
திருவோணம் : எதிர்பார்த்த ஒன்றை அடைவதில் போராட்டத்தை சந்திப்பீர்கள். உடல் நிலையில் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2: தேவையற்ற சங்கடம் ஏற்பட்டு மறையும். உறவினர் ஒருவரால் நெருக்கடியை சந்திப்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : நம்பிக்கையுடன் உங்கள் புதிய செயலை ஆரம்பிப்பீர்கள். நிதிநிலை சீராகும்.
சதயம் : யோசித்து செயல்பட்டு ஒரு முக்கியமான செயலில் வெற்றி அடைவீர்கள். நெருக்கடி விலகும்.
பூரட்டாதி 1, 2, 3 : சூழ்நிலையை சாதகமாக்கி கொள்வீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும்.

மீனம்: பூரட்டாதி 4 : தேவையற்ற செலவுகளால் நெருக்கடி சந்திப்பீர். பணம் பல வழிகளிலும் செலவாகும்.
உத்திரட்டாதி : உங்களுடைய பேச்சுக்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். விழிப்புணர்வு தேவை.
ரேவதி : குடும்பத்திற்குள் நெருக்கடி சூழும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண முடியாது.