இன்றைய பலன் உங்கள் ராசிக்கு எப்படி?

0
307

மேஷம்: அசுவினி : மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பரணி : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள்.
கார்த்திகை 1 : மறைமுக எதிரியை கண்டறிவீர்கள். உங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் நினைத்த செயல் இன்று நிறைவேறும். புதிய தொழில் குறித்த சிந்தனை மேலோங்கும்.
ரோகிணி : பொதுப்பணியில் ஆர்வம் உண்டாகும். உங்கள் செயலை மற்றவர்கள் புகழ்வார்கள்.
மிருகசீரிடம் 1, 2 : நேற்றைய பிரச்னை இன்று முடிவிற்கு வரும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4 : வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
திருவாதிரை : தொழிலில் ஏற்பட்ட தடை சரி விலகும். குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக முயற்சி அனுகூலமாகும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். மற்றவர்கள் வழியே லாபம் ஏற்படும்.

கடகம் : புனர்பூசம் 4 : மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
பூசம் : விரோதிகளின் கை மேலோங்கும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறாமல் போகும்.
ஆயில்யம் : பண நெருக்கடிக்கு ஆளாவீர்கள் அதனால் உங்கள் செயல்களில் தடை ஏற்படும்.

சிம்மம் : மகம் : நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
பூரம் : உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சங்கடம் அகலும். நல்ல எண்ணம் ஒன்று நிறைவேறும்
உத்திரம் 1: நிரந்தர வருமானம் கிடைக்க முயற்சி எடுப்பீர்கள். உங்கள் செல்வாக்கு வெளியிடத்தில் உயரும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4 : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.
அஸ்தம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.மகிழ்ச்சியான நாள்.
சித்திரை 1, 2: ஆடம்பர செலவு அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.

துலாம் : சித்திரை 3, 4: வீட்டில் சாமர்த்தியமாக செயல்பட்டு தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
சுவாதி : நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் உண்டாகும். நிதானமான நாள்.
விசாகம் 1, 2, 3 : தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். அதனால் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும்.

விருச்சிகம் : விசாகம் 4: திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : தொழில் குறித்த முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் குறையும்.
கேட்டை: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். பெரியோரின் ஆதரவால் எண்ணம் நிறைவேறும்.

தனுசு : மூலம்: தைரியமும்,தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூராடம்: புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
உத்திராடம் 1: நேற்றைய பிரச்னை ஒன்று நல்ல முடிவிற்கு வரும் நிம்மதியான நாள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : உங்களுடைய நல்ல எண்ணம் இன்று நிறைவேறும். யோகமான நாள்.
திருவோணம் : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும்.
அவிட்டம் 1, 2 : பொதுக்காரியத்தில் உங்கள் மனம் செல்லும். ஒரு சிலர் வெளியூர் செல்வீர்கள்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள்.
சதயம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். கோவிலுக்கு செல்வீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உங்கள் செயலுக்கு நண்பர்கள் உதவுவார்கள். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.

மீனம் : பூரட்டாதி 4 : உற்சாகமாக செயல்படுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
உத்திரட்டாதி : நண்பரிடம் மனச்சுமையை இறக்கி வைப்பீர்கள். நிம்மதியான நாள்.
ரேவதி : நேற்று சந்திக்க நினைத்த உறவினர் ஒருவர் இன்று உங்களைத் தேடி வருவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here