இன்றைய ராசி பலன் – 26.10.2022

0
293

மேஷம்: அசுவினி: எதிர்பார்ப்பு நிறைவேறும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.
பரணி: தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். உறவினர் வருகையால் மகிழ்வீர்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும்

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: எதிரியால் ஏற்பட்ட பிரச்னை விலகும். விருப்பம் நிறைவேறும்.
ரோகிணி: நண்பர்களின் துணையுடன் ஒரு பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். எதிரிகள் உங்களிடம் சரணடைவர்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: புதிய உற்சாகம் தோன்றும். சொத்து விவகாரம் பற்றி ஆலோசிப்பீர்கள்.
திருவாதிரை: குடும்பத்தில் பிரச்னைகளை சரிசெய்வீர்கள். பெரியோரின் ஆதரவுண்டு.
புனர்பூசம் 1, 2, 3: அமைதியாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நிதிநிலை உயரும்.

கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்ட செயல்களில் மாற்றம் செய்வீர்கள். திருப்பு முனையான நாள்.
பூசம்: குடும்பத்தினரின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
ஆயில்யம் உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

சிம்மம்: மகம்: வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு.
பூரம்: தொழிலில் இருந்த சிக்கல்களை சரிசெய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்
உத்திரம் 1: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
அஸ்தம்: நிதிநிலை குறித்த எண்ணம் மேலோங்கும். பேச்சு திறமையால் நன்மை ஏற்படும்.
சித்திரை 1, 2: சமூக நலனில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவர்.

துலாம்: சித்திரை 3, 4: உங்கள் அணுகுமுறையால் நீண்ட நாள் பிரச்னை இன்று தீர்வுக்கு வரும்.
சுவாதி: உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள்.
விசாகம் 1, 2, 3: வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் எண்ணப்படி குடும்பத்தினர் செயல்படுவர்.

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
அனுஷம்: குடும்பத்தில் செலவுகள் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.
கேட்டை: வழக்கமான செயல்களில் ஈடுபடுவீர்கள். சிலர் வெளியூர் பயணம்மேற்கொள்வர்.

தனுசு: மூலம்: எதிர்பார்த்த வருவாய் உங்களைத் தேடி வரும். ஆதாயமான நாள்.
பூராடம்: பேச்சில் விவேகம் வெளிப்படும். நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள்.
உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.
திருவோணம்: முதலீடுகள் செய்தவற்றில் ஆதாயம் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும்
அவிட்டம் 1, 2: நீண்ட நாளாக நினைத்திருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: தந்தைவழி உறவுகளின் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சதயம்: நேர்த்திக்கடன் நிறைவேறும். தெய்வ அருளால் விரும்பியதை அடைவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். மனம் இன்று அமைதியை நாடும்.

மீனம்: பூரட்டாதி 4: வெளியூர் பயணங்களால் சங்கடம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்
உத்திரட்டாதி: சோர்வு தென்படும். மனம் அமைதியை நாடும். உடல்நலனில் அக்கறை தேவை.
ரேவதி: உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் கோபம் கொள்வர். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here