இன்றைய நாளில் உங்களுக்கான பலன் எப்படி? 18.06.2022

0
218

மேஷம் : அசுவினி : நீங்கள் தொழிலை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சி அனுகூலமாகும்.
பரணி : பணியிடப் பிரச்னையை சரி செய்வீர்கள். நிதி நிலை உயரும்.
கார்த்திகை 1 : தொழிலில் புதிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4 : நேற்று இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்
ரோகிணி : இன்று நீங்கள் நினைத்த செயலை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் சிறு, சிறு தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : உங்கள் முயற்சியில் பின்னடைவு உண்டாகும். இனம்புரியாத குழப்பம் ஏற்படும்.
திருவாதிரை : இன்று எந்தவொரு செயலிலும் அவசரம் வேண்டாம். நிதானம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். விழிப்புணர்வு அவசியம் வேண்டும்.

கடகம் : புனர்பூசம் 4 : நண்பர்களின் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்னை முடிவைக் காண்பீர்கள்.
பூசம் : உறவுகளிடம் ஏற்பட்ட மனஉளைச்சல் சரியாகும். நினைத்த செயலில் லாபம் காண்பீர்கள்.
ஆயில்யம் : வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலால் உங்களுடைய நேற்றைய கனவு நிறைவேறும்.

சிம்மம் : மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகிச் செல்வர்.
பூரம் : உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்துடன் தொழிலில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1 : உங்கள் செயலில் இருந்த தேக்கம் விலகும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்கள் முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள்.
அஸ்தம் : விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும்.
சித்திரை 1, 2 : உங்கள் கையை விட்டுப்போன ஒப்பந்தம் இன்று உங்களிடம் வந்து சேரும்.

துலாம் : சித்திரை 3, 4 : மனதில் ஆசைகள் அதிகரிக்கும். உங்களுடைய தேவைகளில் ஒன்று நிறைவேறும்.
சுவாதி : அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கை வேண்டும். இல்லையெனில் சங்கடங்களை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : நேற்றைய எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள கடுமையான முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம் : விசாகம் 4 : உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.
அனுஷம் : குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
கேட்டை : உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். அனைவரும் பாராட்டுவர்.

தனுசு : மூலம் : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.
பூராடம் : குழப்பங்கள் விலகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்திராடம் 1 : முன்யோசனையுடன் செயல்படுவதால் சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4 : நேற்றைய செயலால் இன்று சங்கடம் உண்டாகி குழப்பத்தில் மூழ்குவீர்கள்.
திருவோணம் : உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டு செயல்களைத் தள்ளிப் போடுவீர்கள்.
அவிட்டம் 1, 2 : உங்களுடைய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாப நிலையைக் காண முடியாமல் போகும்.

கும்பம் : அவிட்டம் 3, 4 : புதிய முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் நிதிநிலை உயரும்.
சதயம் : பழைய முதலீட்டில் இருந்து லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு சங்கடம் மறையும்.

மீனம் : பூரட்டாதி 4 : அரசு வழியிலான எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி : பணியிடங்களில் இருந்து வந்த நெருக்கடிகளை சரி செய்வீர்கள்.
ரேவதி : உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள் அதனால் நன்மை உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here