உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 2100 இலட்சம் ரூபா செலவில் இரத்தினபுரி மாவட்டத்தில் நான்கு வைத்தியசாலைக்கு அம்பிலன்ஸ் வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தில் சூரியகந்த, கொலோன்ன, ரங்வல, பல்லேபெந்த ஆகிய நான்கு வைத்தியசாலைகளுக்கே இவ்வாறு அம்புலன்ஸ் வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வண்ணியாராச்சி, முதிதா சொய்சா மறறும் பிரதேச சபை தலைவர்கள் உட்பட வைத்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ்