கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கஜுகம பகுதியில் இன்று காலை 7.30 அளவில இடம்பெற்ற இச்சம்பவத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரு பஸ்களின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.