இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அதில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.