இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா

0
142

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 3ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், ஊடகவியலாளரும் செய்தி வாசிப்பாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்தீன் தலைமையிலும், நிர்வாக இயக்குனர், மென் பொருளியலாளர் ரஸா மல்ஹர்தீனின் வழிகாட்டலிலும் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எம். நஹியா கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக சமூக செயற்பாட்டாளர் சஹீட் எம் ரிஸ்மி கலந்து கொண்டார்.

இதன் போது வெகுஜன ஊடக கற்கை நெறி, புகைப்படக்கலை மற்றும் வீடியோகலை கற்கை நெறி ஆகியவற்றை நிறைவு செய்த சுமார் 200 மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் ஊடக ஒழுக்கங்களுடன் கூடிய ஊடகவியலின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியானது கடந்த 10 வருடங்களாக இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
மேலும், பிரயோக ரீதியில் ஊடக கற்கை நெறியை மிகச் சிறப்பாக வழங்கும் அரச டிவெக் (TVEC) அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு ஊடக கல்லூரியாகவும் திகழ்கின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here