கிழக்கு மாகாணத்தின் மூத்த எழுத்தாளர்  உமா வரதராஜன் எழுதிய   ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில்   கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கருத்துரைகளை  பேராசிரியர்.செ.யோகராசா, கவிஞர்கள், சோலைக்கிளி, மன்சூர் ஏ காதர், வாசுதேவன்,சபா-சபேஷன், டாக்டர்.(திருமதி) புஷ்பலதா லோகநாதன், ஜே.அதிசயராஜ், சிவ-வரதராஜன், சஞ்சீவி சிவகுமார், பி சஜிந்ரன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நூலின் முதற் பிரதிகளை  கல்முனை  உயர்நீதிமன்ற நீதிபதி  ஜே.ட்ரொட்ஸ்க்கி , மூத்த ஊடகவியலாளர் க.குணராசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் எழுத்தாளர்கள்,  கல்வியாளர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.