குஜராத் மாநிலத்தின் மோர்பி என்ற இடத்தில் தொங்கு பாலமொன்று அறுந்து வீழ்ந்த அனர்த்தத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் பொலிஸ் மாஅதிபர் அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மாலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தின் போது குறித்த பாலத்தில் சுமார் 500 பேரளவில் இருந்துள்ளதோடு, எல்லையை மீறி அதிகளவானோர் அதில் பயணித்ததால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.