உலக சமாதான தினத்தை முன்னிட்டு தேசிய சமாதான பேரவை மற்றும் கலாசார மற்றும் சுற்றாடல் மன்றம் இணைந்து நடத்திய அமைதி ஊர்வலம், வீதி நாடகம் மற்றும் கலாசார நிகழ்ச்சி ஒன்று இன்று இடம்பெற்றது.

ஹட்டன் நகர சபையில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அட்டன் நகரிலிருந்து ஹட்டன் மல்லியபபு வரை ஊர்வலமாகச் சென்றதுடன், சமாதானத்தை வெளிபடுத்தக் கூடியதான வீதிநாடகமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

எம்.கிருஸ்ணா