உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வெளியான செய்தி

0
160

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம், 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு, எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல்கள் அதிகாரியினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கை, இன்று (26) முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையிலும் மேற்கொள்ள முடியும் எனவும், அத்துடன், வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வது, செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் வரை காலி மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here