எனது வாகனங்களை மீளப் பெற்றால் பஸ்ஸில் பயணிப்பேன்

0
61

எனக்கு வழங்கப்பட்ட வாகனங்களை அரசாங்கம் மீளப் பெற்றால் பஸ்ஸில் பயணிப்பதற்கு எனக்கு வெட்கம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்ட வாகனங்களை மீளப் பெற்றால் பேரூந்தில் பயணம் செய்வதற்கு எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. நான் யாரையும் சார்ந்தும் இருக்கவில்லை” என்றும் சந்திரிக்கா தெரிவித்தாா்.

“நான் வேறு நபர்களுக்கு வழங்கியோ அல்லது யாரிடம் இருந்தும் பெற்றுக் கொண்டதோ இல்லை” என்று குறிப்பிட்ட அவா், “ஜனாதிபதிப் பதவியில் இருந்து வெளியேறிய போது எனது வங்கி கணக்கில் பணம் எதுவும் இல்லை” என்றும் தெரிவித்தாா்.

“மகிந்த ராஜபக்ஷவின் 9 வருட கால ஆட்சியில் எனக்கான ஓய்வுநிலை பணமோ, சலுகைகளோ எதுவும் கிடைக்கவில்லை. எனது பணியாளர்களின் சம்பளம், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை நானே செலுத்தினேன்” என்றும் சந்திரிகா குறிப்பிட்டாா்.

“அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடு. மற்றும் நான்கு வாகனங்களை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றேன்” என்று குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, “பயணம் செய்யும் போது ஒரு ஜீப், ஒரு கார் பாதுகாப்புக்காக இரண்டு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றேன்” என்றும் தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here