எரிபொருள் விநியோகம் இன்று முதல் முப்படையினர் வசம்

0
304

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சி.பி.சி) எரிபொருள் விநியோகத்தை முப்படை, பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும், இந்த முறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான தங்கள் அடையாளத்தை நிரூபித்த பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here