இராகலையில் குறுந்திரைப்பட கலைத்துறைக்கு உயிர் ஊட்டும் வகையில்  “த ரூஸ் இன்ட்” அந்த தந்திரத்தின் முடிவு என்ற அரை மணிநேர திரைப்படத்தை கலைஞரும் திரைப்பட இயக்குனருமான ரொணி தயாரித்துள்ளார்.
 இராகலை பிரதேசத்தை மையமாக கொண்டு பட தயாரிப்பாளர் ராணியின் எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள  “த ரூஸ் இன்ட்” திரைப்படம் தோட்டம் ஒன்றின் விவசாய காணி ஒன்று ஆக்கிரமிப்பு செய்யப்படுவதால் ஏற்படும் பிரச்சினையை எடுத்துக்காட்டி தயாரிக்கப்பட்ட திரைப்படமாக வெளிவந்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ரொணி காளி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதுடன்,முதலாளி ரத்னவேலு கதாபாத்திரத்தில்  நடிகர் ஜெயகுமார் மற்றும் காவல் காரன் தங்கராஜியாக நடிகர் சிவராமனும் இவருக்கு மகனாக சிறுவன் பிரகிசானும்,மாரி கதாபாத்திரத்தில் தோட்டக்காரனாக  நடிகர் செழியனும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவு – சதீஸ் தங்கவேல் செய்துள்ளார்.இசையமைப்பினை  ஷான் திறமையாக  செய்துள்ளதுடன்,படத்தின் கலர் கிரேடிங்- பாஸ்கர் செய்துள்ளதுடன்,
உதவி இயக்குனர் மணிவண்ணனின் இப்படத்தை  – ரொணி டிரீம் பிரொடக்‌ஷன் தயாரிப்பு செய்துள்ளது.
“த ரூஸ் இன்ட்” திரைப்படம் அண்மையில் இராகலை லக்மாலி திரையரங்கில் இரண்டு தினங்கள் 13 காட்சிகளாக திரையிடப்பட்டது.
கல்மாடி திரையரங்கில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் “த ரூஸ் இன்ட்” குறுந்திரைப்படம் அதிக ஜனதிரளை பார்வையாளராக கொண்டு அதிக வசூலையும், மாபெறும் வரவேற்பையும் பெற்ற திரைப்படமாக விளங்குகிறது.
எதிர்காலத்தில் இத்திரைப்படம் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவுள்ளது,கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் இப்படம் திரையிடவுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஆ.ரமேஸ்.