ஒன்றுப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்- உதயகுமார் MP

0
263

நாட்டின் நலன் கருதி மக்களின் எதிர்ப்பார்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனநாயக ரீதியில், அமைதியான முறையில் அரசியல், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றுப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக வழியில் தீர்வு காண வேண்டும் எனவும் பதவி நோக்கத்துடன், அதிகார மோகத்தில் செயல்பட்டால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது அத்துடன் நாடு மேலும் அதல பாதாளத்துக்கு செல்லும் என்பதுடன் போராட்டம் மேலும் உக்கிரமடைவதை யாராலும் தடுக்க முடியாது

எனவே, ஜனாதிபதி பதவி விலகியுள்ள நிலையில் ஸ்திரமான சர்வகட்சி ஆட்சி ஒன்றை அமைக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட அரச கட்டிடங்களை போராட்டக்காரர்கள்
மீள கையளித்ததை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அரசியல் பதவி, அதிகாரப் போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here