ஒரு வாரத்திற்கு பிறகு நோர்வூட் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு பெற்றோல் – வீடியோ இணைப்பு

0
423
நோர்வூட் நகரில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு ஒருவாரத்திற்கு பிறகு 18.06.2022.சனிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் பெற்றோல் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் நோர்வூட் தொடக்கம் மஸ்கெலியா பிரதான வீதியில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் வரிசையில் காணப்பட்டதோடு   நோர்வூட் தொடக்கம் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் வாகனங்கள் நிருத்தி வைக்கப்பட்டுள்ளது.
 நோர்வூட் பகுதியில் உள்ளவர்களுக்கு முதலில் பெற்றோலை வழங்குமாறு நோர்வூட் பிரதேச மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பொகவந்தலாவ- எஸ் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here