வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை வவுனியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா குட்செட்வீதியின் உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடை ந்ததையடுத்து சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது-42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது- 36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது-9) , கௌ.கேசரா (வயது-3) ஆகியோர் உறங்கிய படியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.