கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைது -கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம் கண்டனம்

0
236

 

திருகோணமலை சேனையூரில் பகுதியில் முள்ளிவாய்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரிகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம் கடும் கண்டனம் தெரிவிப்பு.

முள்ளிவாக்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் திருகோணமலையில் கைது செய்யப்பட சம்பவத்தை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை புதன்கிழமை (15) வெளியிட்டுள்ளது.

உரிமையை வேண்டி போராடிய ஒரு இனத்தின் மீது சர்வதேச நாடுகளை தவறாக வழிநடாத்திய இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட பாரிய இனவழிப்பினால் இறுதி எட்டு மாதங்களில் 146679 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

அந்தவகையில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொன்றொழிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், பொதுமக்களுக்கு 15 ஆண்டுகள் நடந்து நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசினாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினாலும் தொடர்ந்து மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றது.

இலங்கை அரசினாலும் படைகளினாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூறும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூறும் முகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) சம்பூர் சேனையூர் புவனகணபதி  ஆலையத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.

அதில் பங்கேற்றி கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் சமூகசெயற்பாட்டளரான 40 வயதுடைய  கமலேஸ்வரன் விஜிதா, 40 வயதான செல்வவினோத்குமார் சுஜானி, பிரதேச சபை முன்னாள் உறுப்பினரான 43 வயதுடைய நவரெட்ணராஜா. ஹரிஹரகுமார், கிழக்கு பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தெரிவாகியுள்ள 22 வயதுடைய கமலேஸ்வரன் தேமிலா, ஆகியேர் கைது செய்யப்பட்டனர் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அதேவேளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

அதேவேளை தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை சர்வதேசம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(கனகராசா சரவணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here