கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் ரஞ்சன்

0
395

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது..

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும் அந்த நீதிமன்றங்களால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பிலும் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிக்க சென்ற போது அவரை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்க முதலில் கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here