மட்டக்களப்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக 3 சுயேட்சைகுழுக்கள்;; இன்று திங்கட்கிழமை (30) மட்டு தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளனர்.
ஏதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது இதற்கமைய மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தலைமையில்; சுயேட்சை குழுவில் 8 பேர் போட்டியிடுவதற்காக முதல் முதலாக கட்டுப்பணத்தை இன்று தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளார்.
அதேவேளை மட்டக்களப்பு நல்லையா வீதியைச் சேர்ந்த அரச திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 81 வயதுடைய கனகசூரியம் சோமாஸ்கந்தமூர்த்தி தலைமையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கு 8 பேருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அலிஹார் மௌலானாவின் ஊடக செயலாளர் அஸ்மி தலைமையில் சுயேட்சைக்குழுவில் 8 பேர் களமிறக்கப்பட்டு அதற்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர்.
(கனகராசா சரவணன்)