கணவருக்காக உடல் உறுப்புக்களை தானம் செய்தார் மீனா

0
457

 

“என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய யாராவது முன்வந்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன்.” என  பிரபல நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடலுறுப்பு தான தினம் நேற்று ஆகும். இதனைமுன்னிட்டு, நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை நலக் குறைவால் கடந்த ஜூன் 27ஆம் திகதி மரணமடைந்தார்.

தனது கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here