2022ஆம் ஆண்டின் ஆண்கள் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி கத்­தாரில் இன்று ஆரம்­ப­மா­கவுள்ளது.

, கத்தார் தலை­நகர் தோஹா­­வி­லுள்ள அல் பாய்த் அரங்கில் இலங்கை நேரப்­படி இரவு 7.30 ஆரம்­ப­மாகும். அதே அரங்கில் 2 மணித்­தி­யா­லங்­களின் பின்னர், அதா­வது இலங்கை நேரப்­படி இரவு 9.30 மணிக்கு இச்­சுற்­றுப்­போட்­டியின் முதல் போட்­டியில் கத்­தா­ருக்கும் ஈக்­கு­வ­டோரும் மோத­வுள்­ளன.

டிசெம்பர் 18 வரை நடை­பெறும் இச்­சுற்­றுப்­போட்­டியில் நடப்புச் சம்­பியன் பிரான்ஸ் உட்­பட 32 அணிகள் பங்­கு­பற்­று­கின்­றன. 

இவை 8 குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்டு லீக் முறை­யில் முதல் சுற்­றுப்­போட்டி நடை­பெறும். தோஹா­வி­லுள்ள 4 அரங்­குகள் உட்­­பட மொத்தம் 5 நக­ரங்­க­ளி­லுள்ள 8 அரங்­கு­­களில் போட்­டிகள் நடை­பெறும். 29 நாட்­களில் 64 போட்­டிகள் நடை­பெ­ற­வுள்ளன. 

வெளி­நா­டு­களைச் சேர்ந்த பாட­கர்கள் உட்­பட பல கலை­ஞர்­களின் நிகழ்ச்­சிகள் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.