கந்தப்பளை-ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெறுமை தாக்கி (84)  வயோதிபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு காட்டெறுமை தாக்குதலுக்கு இலக்கானவர் ஹைபொரஸ் இலக்கம் மூன்று தோட்டத்தின் மூத்த பிரஜையான முனியன் கங்காணி என்பவராவார்.

 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

 

ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவு சிரிய நகரில் (18) பகல் பிங்கந்தலாவை பகுதியிலிருந்து காட்டெறுமை ஒன்று நகருக்கு திடீரென வந்துள்ளது.

இதன்போது இந்த காட்டொறுமையை விரட்டியடிக்க நகரில் சிலர் முற்பட்டுள்ளனர்.இந்த நிலையில் வயோதிபரான முனியன் கங்காணி நகரில் தனது கைதியிடம வருகை தந்து கடையில்தான ஓரத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

 

இந்த சமயத்தில் காட்டெறுமை தான் நகரில் இருந்து தப்பி செல்ல வழி தெரியாது அங்கு ஓடியுள்ளது.

 

இதன்போது கடையருகில் நின்றுகொண்டிருந்த வயோதிபரை நோக்கி வந்த எருமையை தனது கைதியின் விரட்டிய வயோதிபரை மிக வேகமாக வந்து எருமை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது.

 

இதையடுத்து காட்டெறுமை முட்டி தூக்கியெறியப்பட்ட வயோதிபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிசார் தெரிவித்தனர்.

 

ஆ.ரமேஸ்.