ஹப்புத்தளை – தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயில் தண்டவாளத்தில் பாறை ஒன்று வீழ்ந்தமையினால் மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலின் மீதே கற்கள் வீழ்ந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அதனை அகற்றும் பணிகளும் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.