கல்முனை மாநகர சபையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக கண்டறிந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க முபாரக் அப்துல் மஜீத் அவர்களை நியமிக்குமாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் மல்ஹர்தீன் இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்ற கல்முனை மாநகர சபையில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகளவிலான நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன்  வெளிவந்துள்ளன.
எனவே இது தொடர்பாக   ஆராய்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சரியான உண்மைத்தன்மையுள்ள  அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எமது கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களை நியமிக்குமாறும், இக்குற்றச்சாட்டு தொடர்பாக  ஜனாதிபதி அதிகமான கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.