களமிறங்கும் சஜித்; நாடாளுமன்றக் குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

0
388

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் 19 ஆந் திகதி காலை ஏற்க்கப்படுவதோடு, எதிர்வரும் 20 ஆந் திகதி ஜனாதிபதி நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதன் பிரகாரம், இன்றும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கூடியது.

இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்னதாக அறிவித்திருந்தார் என்பதோடு, இது தொடர்பான பிரேரனை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பவற்றின் நாடாளுமன்றக் குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த தீர்மானம் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான முன்னோக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளுடன் மேலும் பல கலந்துரையாடல்கள் இன்று நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here