காணாமல் போன மாணவன் மகாவலி கங்கையிலா?

0
425

பேராதனை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 18ஆம் திகதி பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மகாவலி கங்கையில் மாணவனை தேடும் நடவடிக்கையில் விசேட நீர்மூழ்கிக் குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ள குறித்த மாணவன் தங்கியிருந்த விடுதியிலிருந்து கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அதன் ஊடாக அவர் தொடர்பில் எந்தவொரு மேலதிக தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் நான்காம் வருடத்தில் பயிலும் 24 வயதுடைய யக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இது தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here