காயன்குடா கண்ணகி வித்தியாலய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

0
56

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான. எல்லே சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி திருகோணமலை கோணேஸ்வரா மைதானத்தில் புதன்கிழமை (31) நடைபெற்றது.

34 பாடசாலை அணிகள் பங்குபற்றிய பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயன்குடா கண்ணகி வித்தியாலயம் மற்றும் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய காயன்குடா கண்ணகி வித்தியாலயம் 40 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இப்போட்டியில் காயன்குடா கண்ணகி வித்தியாலய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

காயன்குடா கண்ணகி வித்தியாலயம் கடந்த வருடம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் முதலிடம் பெற்றதுடன் தேசிய மட்ட போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here