கிழக்கிலங்கையின் முக்கிய மான மூத்த எழுத்தாளர் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்ட ஆசுகவி அன்புடீன் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சற்று முன் காலமானார்.

இலக்கிய உலகில் பரந்து பேசப்படுபவர் கவிஞரும், எழுத்தாளருமான அன்புடீன் மேடை நாடகத்தின் ஊடாக இலக்கியப் பரப்புக்குள் நுழைந்தவர். அதனைத் தொடர்ந்து கவிதையிலும், சிறுகதையிலும் பிரபலமானார். இன்று வரை பல புத்தகங்களை வெளியிட்டு இலக்கிய பரப்பில் மிகவும் ஆழமாகத் தடம் பதித்துள்ளார். எல்லோருடனும் இவர் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், பேசுவதனாலும், பழகுவதானாலோமோ என்னவோ அன்புடீன் என்ற புனைப்பெயர் இவரில் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவர் நல்ல வழிகாட்டி இவரது வழிகாட்டலில் பலர் இலக்கியத்தில் வளர்ந்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்தர் லெப்பை என்ற இயற்கைப்பெயரைக் கொண்ட இவர் 1951.08.25ஆம் திகதி பாலமுனையில் பக்கீர் முஹிதீன், ஆசியா உம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்ற இவர், இலக்கிய உலகில் பொன்விழாக் கண்டவர். பல நூல்களுக்குச் சொந்தக்காரர்.