கொள்ளையடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது

0
220
முழு உரிமமாக ஒரு குடும்பம் நாட்டை எழுதி எடுத்துக் கொண்டு முழு நாட்டையும் கொள்ளையடித்ததாகவும், இரண்டு வருடங்களாக நாடு ராஜபக்ஸவாதத்தையும் குடும்பவாதத்தையுமே பின்பற்றியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
புதிய நவீனத்துவ ஒரு இலங்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட முக்கியஸ்தர்கள் பலரை  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கம் முன்வைத்த முன்மொழிவுகளில் பெரும்பாலான முன்மொழிவுகளுக்கு,ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இணங்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த கருத்தாடலை பரவலாக முன்னெடுக்கும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் “செயலக அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அதற்குத் தேவையான வளங்களை” பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.
இணக்கப்பாட்டின் மூலம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதைவிடுத்து நாட்டைக் கட்டியெழுப்ப வழியே இல்லை.
தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் காரணிகள் பங்களித்துள்ளன எனவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான மற்றும் நிலைபேறான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
இனவாதம்,பொறுப்பற்றவாதம், தீவிரவாதம்,வர்க்கவாதம்,மதவாதம் என்பன ஒழிக்கப்பட வேண்டும் எனவும்,முற்போக்கான அறிவொளிப் பயணத்தைத் தொடங்க வேண்டும் .
பிற்போக்குத்தனமான சிந்தனைகளை விடுத்து,அறிவார்ந்த சிந்தனைகளை அணிகலனாகக் கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று இந்நாட்டை இத்தகைய பாதாளத்தில் தள்ளிவிட்டது.
அரசாங்கத்தினால் கடந்த இரண்டரை வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட தோல்வியடைந்த ஆட்சியினால் 225 பேரும் வேண்டாம் என்ற கருத்தோட்டம் உருவாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஆனால் அது முற்றிலும் அவ்வாறே அமைந்து விடாது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here