தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலமையகமான ‘தாயகம்’ திறப்பு விழா  இன்று ஞாயிற்றுகிழமை காலை ஹட்டன் – டிக்கோயா என்பீல்ட் தோட்டப்பகுதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன் தலைமையில் , இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜீத்பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனிதிகாம்பரம்,மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதகிருஸ்னண், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார்,இந்திய உயஸ்தானிகர் கோபால்பாக்லி, கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரலான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை இலங்கை தொழிலாளர்

காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றார் .

சதீஸ்