சகோதரர் இருவருக்கு இடையில் தகராறு காரணமாக 10 லட்சம் ரூபா மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிள் தீ வைத்த சம்பவமொன்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அன்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படு காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சண்டையின் போது 10 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில் பொலிசார் மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.