ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி சமர்ப்பித்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று(08) ஆரம்பமாகிறது. ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது இடம்பெறவுள்ளது.

ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என்பது விசேட அம்சமாகும்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை அல்லது அக்ராசன உரை தொடர்பான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(08) அழைப்பு விடுத்திருந்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளைக் விடவும் மாற்றீடான சிறந்த கொள்கைகள் இருப்பின் அவற்றை ஆழமாக பரிசீலிக்கத் தயாரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி நேற்றைய கொள்கை பிரகடன உரையில் விளக்கமளித்தார்.